TamilsGuide

விமான நிலையத்தில் பெண் பயணியின் கன்னத்தில் அறைந்த நபர்

கொலம்பியா  தலைநகர் பொகோட்டாவில் உள்ள எல்.டொராடோ சர்வதேச விமான நிலையத்தில் பெண் பயணியின் கன்னத்தில் அறைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இருக்கையை விட்டு எழுந்து வேறு இருக்கையில் அமர மறுத்த பெண் பயணியை சாண்டாக்ரூஸ் என்பவர் கன்னத்தில் அறைந்த நிலையில், அவரை பிற பயணிகள் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தனது மனைவி அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகேயுள்ள இருக்கையில் இருந்து எழுந்து செல்லுமாறு கூறியும் , அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரை அடித்ததாக சாண்டாக்ரூஸ் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment