TamilsGuide

தலைவன் எறங்கி சரிதம் எழுதவே - யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்த கூலி டிரெய்லர்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. அண்மையில் படத்தின் பாடலான கூலி தி பவர்ஹவுஸ் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு இருக்கிறது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், கூலி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றுது. அவ்விழாவில் கூலி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து யூடியூபில் வெளியான கூலி டிரெய்லர் விரைவில் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. 

Leave a comment

Comment