TamilsGuide

வானொலியில் கிரபிக்ஸ் செய்த வித்தகர்...மதுக்குரல் மன்னன் - கே.எஸ்.ராஜா

இலங்கை வானொலி அறிவிப்பாளர் மதுக்குரல் மன்னன் - கே.எஸ்.ராஜா,
முழுப்பெயர்.
கனகரட்னம் ஸ்ரீஸ்கந்தராஜா.
தந்தை. மருத்துவர். தாய்.ஆசிரியை.
கல்விகற்றது கொழும்பு ரோயல் கல்லூரி.கணிதம் இராசயன பட்டதாரி.
சிலகாலம் விரிவுரையாளராக பல்கலைகழகத்தில் பணியாற்றினார்.
உடன் பிறந்த சகோதரிகள் நால்வரும்
மருத்தவர்கள்.1970.ஆம் ஆண்டு இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் அறிவிப்பாளராக இணைந்து கொள்கின்றார்.சாதாரண பொது மக்களும். நிலையத்திற்கும் மிகுதியான உறவினை ஏற்படுத்திய
பல புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினார்.
லண்டன் பி.பி.சி. வானொலியில் ஒலிபரப்பான"ஹீட் பரேட்" என்ற நிகழ்ச்சியினை அடிப்படையாக கொண்டு இசையணித்தேர்வு.நிகழ்ச்சியினை அறிமுகம் செய்தார் அது போன்று தொலை பேசியுடன் உனரயாடும்
உங்கள் விருப்பம்.நிகழ்ச்சி.மாணவர்களின்
அறிவுத்திறனை வளர்க்கும் அறிவுக்களஞ்சியம். திரைப்பட இரசிகர்களை மயக்கிய திரைவிருந்து.
இன்னும் பல புதுமையான விளம்பர
நிகழ்ச்சிகள் எல்லாமே நேயர்களின்
அபிமானத்தை வென்று உச்சத்தை தொட்ட நிகழ்ச்சிகளாகும். இவர் வரும்
போது அவருடைய "சிக்னேச்சர்" டியூனை கேட்டவுடனே நமக்குள் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.பாடல்.
திரைப்படம்.பாடியோர்.இயற்றியவர்.
இசையமைப்பாளர்.இப்படி மின்னல் வேகத்தில் எல்லா விபரங்களையும் கூறி பாடலை ஒலிபரப்பும் வழக்கத்தை
ஆரம்பித்து வைத்தவரும் இவரே
இவரது வானொலி விளம்பரயுக்தியாலும் குரல்வளத்தாலும் நம்நாட்டில் மட்டுமல்ல முழு தமிழகமே சொக்கிப்போனது.
அன்று தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காலத்தில் இவர் வானொலியில் செய்த "கிரபிக்ஸ்"
விளையாட்டுகளை இன்று நினைத்தாலும் வியப்பாக இருக்கும்.
நேயர்களின் பெயர்களை மிகவிரைவாக வாசித்துக்கொண்டு போவார் அதில் கீதா. என்று பெயர் வந்தால் உடனே கீதா!ஒரு நாள் பழகும்!....... கீதா! என்ற பதத்தினை மட்டும் ஒலிபரப்பு செய்து நேயர்களை
ஆச்சரியப்படுத்துவார்.
நான் ஏன்? பிறந்தேன். திரைப்படத்திற்காக ஒரு விளம்பரம்.
மக்கள்திலகம்.எம்.ஜி.ராமச்சந்திரன்.
அவரகளே உங்களது இலட்சியம் என்ன?வென்று அவரது ஸ்டைலில்
கேட்பார் அழுவுறவுங்கள சிரிக்வைப்பதும். சிரிக்கிறவுங்கள சிந்திக்வைப்பதும் தான். எனது இலட்சியமென எம்.ஜி.ஆர். பேசும் அந்த
வசனத்தை ஒலிபரப்பு செய்துவிட்டு
அட்டகாசமாக விளம்பரம் செய்வார்.
இப்படித்தான் நீயா? திரைப்படத்தில்
நடிகை ஸ்ரீபிரியா. ராஜா. என்னைவிட்டு
போயிடாதீங்க!...... என்று கதறுவார். அதனை இடைநிறுத்தி நம்ப ராஜாவோ
இல்லை நேயர்களே உங்கள் ராஜா.
விடைபெறும் நேரம் வந்துவிட்டதென
வணக்கம் கூறி விடைபெறுவார். இப்படி
குரு. தீ! . நிறம்மாறாதபூக்கள். தீபம்.
நினைத்ததைமுடிப்பவன்.எதிரொலி.
மீனவநண்பன் எங்கள் தங்க ராஜா.
பட்டாக்கத்தி பைரவன்.காலம்வெல்லும்.
எங்கள் பாட்டன்சொதத்து. இன்னும் பல
திரைப்படங்களுக்கு அவர் செய்த விளம்பரங்கள் புதுமையானவை கேட்பதற்கு சுவாரசியமானவை.
பாடல் ஒலிபரப்பாகும் போது அது இருபக்க இசையாக இருந்தால்
அதனை திருப்பிபோடும் அந்தகணநேரத்தில் வித்தியாசமாக
ஏதாவது கூறி நேயர்களை வியப்பில்
ஆழ்த்துவார்.இப்படித்தான் விடுமுறைவிருப்பம். உலகம் சுற்றும் வாலிபன்.திரைப்படத்தின் பாடல்
பச்சைக்கிளி முத்துச்சரம்!..... பாடலை
ஊரெழுமேற்கு. நுவரெலியா. தரவளைமேற்பிரிவு. நேயர்கள் விரும்புவதாக அறிவிப்பு செய்து பாடலை ஒலிபரப்புகின்றார். இசைதட்டினை திருப்பிபோடும் அந்த சில வினாடிகளில் உலகம் சுற்றும் வாலிபன். இப்போது ஊரெழுமேற்கு.
நுவெரெலியா. தரவளை மேற்பிரிவு.
ஆகிய இடங்களை சுற்றிக்கொண்டிருக்கினறார்.என்று
கூறியதை இன்று நினைத்தாலும் மனம்
இனிக்கிறது.தனது கம்பீரமான குரல் வளத்தால் நேயர்களை வானொலியோடு கட்டிப்போட்டு வைத்த
வித்தகர் அவர். அவர் நம்மைவிட்டு மறைந்தாலும் அந்த வசீகர குரல் இன்றும் எமது செவிகளில் ரீங்காரம்யிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.....

 

 

Leave a comment

Comment