இலங்கைக்கான இந்திய துாதுவர் சந்தோஷ்ஜா, இன்று (02) டிக்கோயா கிளங்கன் ஆதாரவைத்தியசாலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டார் .
டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு விஜயத்தினை மேற்கொண்ட இந்திய துாதுவர் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்.
விஜயத்தில் அவருடன் மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் நிஹால்ஜயசூரிய, மற்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் என பலரும் கலந்து கொண்டனர் .
இதன்போது, வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாகவும் வைத்தியசாலைக்கான புதிய கட்டிடமொன்றையும் பெற்று தருவதாகவும் உறுதியளித்தார்.
அத்தோடு டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியினால் புணரமைக்கப்பட்டது இந்த வைத்தியசாலை இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களினால் கடந்த 2017ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.


