TamilsGuide

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30மணிக்கு யானைதாக்கி 4பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு நெல்லிக்காட்டு கிராமத்திற்குள் புகுந்த யானை வீட்டின் முன்பகுதியில் வைத்து மாணிக்கம் இராமலிங்கம் என்பவரை தாக்கியுள்ளது.

சம்பவ இடத்திற்கு அதிகாலை சென்ற போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் சென்று பார்வையிட்டு படுகாயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணியை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது யானையின் தாக்குதல் காரணமாக படுகாயமடைந்தவரை மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெல்லாவெளி பொலிஸர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 

Leave a comment

Comment