TamilsGuide

அமெரிக்கா மீதான வரி அதிகரிக்கப்பட வேண்டும் – போர்ட்

அமெரிக்கா மீது கூடுதல் வரியை அமெரிக்கா விதிக்க வேண்டுமென ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வரி விதிப்பு அறிவிப்பினை கருத்திற் கொண்டு தளரக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடா சரியான ஒப்பந்தத்துக்குத் தவிர வேறு எதற்கும் சமரசம் செய்யக் கூடாது என தெரிவித்துள்ளார்.

இப்போது தளர வேண்டிய நேரமல்ல. நம்முடைய நிலைப்பாட்டை உறுதியாக வைப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

இப்போதுள்ள போல் உருக்கு, அலுமினியம், வாகனங்கள், மரத்தொழில் மற்றும் தற்போது சுண்ணாம்பு உள்ளிட்டவைகளில் ஏற்கனவே அமுலிலிருக்கும் வரிகளுடன் சேர்த்து 35% வரி அதிகரிப்பு மிகவும் கவலையளிக்கிறது” எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க உருக்கு மற்றும் அலுமினியத்துக்கு 50 வீத வரி விதிக்க வேண்டும் என முதல்வர் போர்ட் , பிரதமர் கர்னியிடம் கோரியுள்ளார்.

கனடாவிடம் அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எண்ணெய், எரிவாயு, முக்கிய கனிமங்கள், உருக்கு, அலுமினியம், மின் சக்தி, பட்டாசு மற்றும் யூரேனியம். நாங்கள் அமெரிக்காவின் முதன்மை வாடிக்கையாளர்கள், மேலும் பல மில்லியன் அமெரிக்கர்களுக்கு வேலை வழங்குகிறோம். எனவே, ட்ரம்பின் வரி ஆபத்துக்கு எதிராக கனடா தனது உள்நாட்டுச் சக்திகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என போர்ட் தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment