TamilsGuide

இலங்கை மீதான வரிக் குறைப்பு - ஹர்ஷ டி சில்வா மகிழ்ச்சி

அமெரிக்கா இலங்கைக்கான வரித் தொகையை குறைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை ஏற்றுமதிகளுக்கான வரியை அமெரிக்கா குறைத்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டு தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வரி குறைப்பு பிராந்தியத்தில் ஏனைய நாடுகளுடன் போட்டியிட உதவும் என ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நம்மைச் சூழ்ந்த சுவர்களை இடித்து, உலகத்துடன் பாலங்களை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடவேண்டும் எனவும்  ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a comment

Comment