'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான தலைவன் தலைவி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைப்பெற்று வருகிறது.
கணவன் மனைவி இடையே உள்ள முரண், அன்பு, சண்டை, கோபம் மற்றும் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் திரைப்படம் வெளியான 4 நாட்களில் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தற்பொழுது உலகளவில் வசூலில் 50 கோடி ரூபாயை கடந்துள்ளது. மேலும் திரைப்படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து சார் மேடம் என்ர தலைப்பில் இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெளியாகியுள்ளது.


