தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. ஒரு அண்டர் கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் 39 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் அதிகம் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


