2025 ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் திருத்தம் இருக்காது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான அனைத்து எரிபொருள் விலைகளும் மாற்றமில்லாமல் இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.
தற்போதைய எரிபொருள் விலைகள் (லிட்டருக்கு):
ஒட்டோ டீசல் – ரூ.289
சுப்பர் டீசல் – ரூ.325
ஒக்டேன் 92 ரக பெற்றோல் – ரூ.305
ஒக்டேன் 95 ரக பெற்றோல் – ரூ.341
மண்ணெண்ணெய் – ரூ.185


