TamilsGuide

300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 300 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் சுமார் 200 பொலிஸார் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு குற்றங்களைச் செய்ததாக நிரூபிக்கப்பட்ட பின்னர், சில உத்தியோகத்தர்கள் அரசு சேவையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய போதிலும், இந்த நடவடிக்கையினால் அவர்களின் மாதாந்திர ஓய்வூதியக் கொடுப்பனவுகளை இழந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தவறு செய்தவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்களைத் தண்டிக்க தற்போதைய அரசாங்கம் தயங்காது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
 

Leave a comment

Comment