புதிய நிர்வாக உத்தரவின்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கான இறக்குமதி வரியை 25 வீதத்திலிருந்து 35 வீதமாக உயர்த்தியுள்ளார்.
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போவதாக கனடா அறிவித்துள்ள நிலையிலேயே இந்த வரி அதிகரிப்பை ட்ரம்ப் விதித்துள்ளார்.
எனினும் சட்டவிரோத போதைப்பொருள் நெருக்கடியில் கனடாவின் செயலற்ற தன்மை மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பழிவாங்கும் கொள்கை காரணமாகவே இந்த வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


