ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட 20 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்தெரிவித்துள்ளன.
ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்பவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், ட்ரம்பின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் மசகு எண்ணெய் மற்றும் பெற்றோலிய பொருட்களை வாங்கிய 20 நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய தடை விதித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, துருக்கி, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


