TamilsGuide

அமெரிக்காவில் இனி அஞ்சல் பார்சல்களுக்கும் வரி

அமெரிக்கா குறைந்த மதிப்புடைய எல்லா அஞ்சல் பார்சல்களுக்கும் வரி விலக்கு அளிப்பதை நிறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அது தொடர்பில் de minimis எனும் குறைந்தபட்ச விதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உத்தரவில் அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி, குறைந்த விலையுள்ள பொருள்களுக்கும் வழக்கமான உரிய வரி விதிக்கப்படும். 800 டாலர் (சுமார் 1,035 வெள்ளி)அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதியிலிருந்து புதிய விதி நடப்புக்கு வரும் என கூறப்படுகின்றது.
 

Leave a comment

Comment