இந்த வார இறுதியில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக எட்டு புதிய படங்கள் திரையரங்குகளில் நாளை வெளியாக இருக்கிறது. பல்வேறு வகை கதைக்களங்களோடு வெளியாகும் இந்த படங்களின் மீது, ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.
ஹவுஸ்மேட்ஸ்
டி.ராஜாவேல் இயக்கத்தில் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா சந்தினி பைஜு, வினோதினீ, தீனா, அப்தூல் லீ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையை ராஜேஷ் முருகேசன் மேற்கொள்கிறார் மற்றும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
மிஸ்டர். ஜூ கீப்பர்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் Mr.ZooKeeper.படத்தின் நாயகியாக ஷிரின் காஞ்ச்வாலா நடித்துள்ளார். படத்தை ஜே.சுரேஷ் இயக்கியுள்ளார். படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொள்ள ஒளிப்பதிவு பணிகளை தன்வீர் மிர் செய்துள்ளார். படத்தை ஜே4 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
முதல் பக்கம்
வெற்றி நடிப்பில் கிரைம் இன்வஸ்டிகேஷன் திரில்லராக முதல் பக்கம் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அனிஷ் அஷ்ரஃப் இயக்கியுள்ளார். படத்தின் நாயகியாக ஷில்பா மஞ்சுனாத் நடித்துல்ளார். மேலும் இவர்களுடன் நயனா சாய், மகேஷ் தாஸ் , தம்பி ராமியா மற்றும் ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏஜிஆர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மகேஷ்வரன் தேவதாஸ் தயாரித்துள்ளார்.
சரண்டர்
கௌதமன் கணபதி இயக்கத்தில் தர்ஷன் தியாகராஜன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் சரண்டர். இப்படத்தில் லால், சுஜித் ஷங்கர், மன்சூர் அலி கான், முதிஷ்காந்த் மற்றும் பதின் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். விகாஸ் இசையமைத்த படத்தை வி.ஆர்.வி குமார் தயாரித்துள்ளார்.
மேலும் உதயா நடித்த அக்யூஸ்ட், டிஜே நடித்த உசுரே , கதிர் நடித்த மீஷா மற்றும் சுவாஸிகா நடித்த போகி திரைப்படங்கள் வெளியாகிறது.


