TamilsGuide

10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு, பொரளை பகுதியில் ஒரு கிலோ கிராமுக்கு அதிகம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொரளை சிறிசர உயன வீட்டுத் தொகுதிக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்த போது, சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து 1 கிலோ 105 கிராம் ஐஸ் போதைப் பொருளும் 125 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதுருகிரியவைச் சேர்ந்த 23 வயதுடையவர்.

அவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நண்பர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment