TamilsGuide

ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு பிணை

மதுகம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோஷல் அபேகுணவர்தனவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவரை தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாக கூறப்படும் வாகனம் ஒன்றை தன்வசம் வைத்திருந்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர், வலானை குற்றத் தடுப்புப் பிரிவில் நேற்று (30) சரணடைந்திருந்தார்.

இதன்போது, ரோஷல் அபேகுணவர்தன வலானை குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
 

Leave a comment

Comment