TamilsGuide

நடிகை ராதிகாவிற்கு டெங்கு- மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் பாரதிராஜா இயக்கிய 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் ராதிகா. நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என்ற பன்முக அடையாளங்கள் கொண்டவர் ராதிகா. தனது தனித்துவமான நடிப்பு திறன் மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடிகை ராதிகா நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் "டெங்கு" காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராதிகா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்னும் 5 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் இல்லம் திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave a comment

Comment