TamilsGuide

இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி- ஆகஸ்டு முதல் அமல் - டிரம்ப் அறிவிப்பு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வரிவிதிப்பு தொடர்பாக இரண்டு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் கூறியிருந்த நிலையில் அறிவித்துள்ளார்.

Leave a comment

Comment