TamilsGuide

செயற்கை தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது - தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்படுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், இயற்கை தங்கத்தின் பண்புகளைப் போலவே இருக்கும் செயற்கை தங்கத்தை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

தங்கத்தின் விலை ஏறவும் குறையவும் மக்கள் பெரும் அவதானத்துடன் கவனித்து வரும் நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மாரதான் ஃபியூஷன் (Marathon Fusion) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், செயற்கை தங்கம் உருவாக்கும் நவீன நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, அணுக்கரு இணைவு உலையில் உருவாகும் நியூட்ரான் கதிரியக்கத்தைக் கொண்டு பாதரசம்-197 ஐ உருவாக்க முடியும், அதுவே தன்னிச்சையாக தங்கம்-197 ஆக சிதைவடைகிறது.

தங்கம்-197 என்பது இயற்கையாக உள்ள நிலையான தங்கத்தின் வடிவம் ஆகும். மாரதான் ஃபியூஷன் குழுவின் கணிப்புப்படி, ஒரு ஜிகாவாட் அளவிலான வெப்ப மின்சார அணு நிலையம் ஒரு ஆண்டு இயங்கினால், அதன் மூலம் பல டன் தங்கம் உருவாக்கக்கூடியதாகும்.

இந்த தொழில்நுட்பம் பொதுவாக பயன்பாட்டுக்கு வந்தால், உலக தங்க சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும், மேலும் தங்கத்தின் பொருளாதார மதிப்பிலும் அதிர்வுகளை உருவாக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.    

Leave a comment

Comment