TamilsGuide

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச விசா வழங்கும் நாடு

மாலைதீவுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச வருகை விசாக்களை வழங்க மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் மாலைதீவு விஜயத்தை அடுத்து லவச வருகை விசாக்களை வழங்க மாலைதீவு முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது,

மாலைதீவுக்கு செல்லும் இலங்கையர்களுக்கான 90 நாள் இலவச விசா ஏற்பாடு நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விசாவைப் பெற, பயணிகள் செல்லுபடியாகும் சர்வதேச பயண ஆவணத்தை வைத்திருக்க வேண்டும்.

அத்துடன் மாலைதீவில் தங்கியிருக்கும் போது அவர்களின் செலவுகளை ஈடுகட்ட போதுமான நிதி இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு விசா வசதி ஒப்பந்தத்தின் விதிகளின் கீழ், மாலைதீவின் குடியேற்றச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி இந்த விசா வசதி வழங்கப்படுவதாக மாலைதீவு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை இலங்கையுடனான உறவுகளுக்கு அரசாங்கம் அளிக்கும் உயர் முன்னுரிமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் மாலைதீவு அரசாங்கம் கூறியுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. 
 

Leave a comment

Comment