TamilsGuide

சீட் பெல்ட் சட்டங்கள் கடுமையாக்கப்படும் – அமைச்சர் பிமல்

பேருந்துகளில் சீட் பெல்ட் (ஆசனப் பட்டி) அணிவது தொடர்பான விதிமுறைகளை விரைவில் கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்தச் சட்டத்தை பின்பற்றத் தவறும் பேருந்து சாரதிகள் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

காலி மாவட்ட போக்குவரத்துக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,350 பேர் வீதி விபத்துக்களில் இறக்கின்றனர், சுமார் 6,000 பேர் படுகாயமடைகிறார்கள்.

அதனால்தான் போக்குவரத்து அமைச்சு 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான வீதி பாதுகாப்பு திட்டத்தை கடுமையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், நாங்கள் சீட் பெல்ட் ஒழுங்குமுறையை விதிப்போம், தொடர்புடைய வர்த்தமானியை வெளியிடுவோம்.

2011 முதல் இந்தச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும், யாரும் இது தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை.

மக்கள் சீட் பெல்ட் அணியாமல் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த நிலையில், வருடாந்திர இறப்பு எண்ணிக்கையை 2,300 லிருந்து 2,000 க்கும் குறைவாகக் குறைக்க இந்த நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment