TamilsGuide

90s ரீயூனியன் - நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் கோவா கொண்டாட்டம்

திரை உலகில் முன்னணி கதாநாயகன், கதாநாயகிகளுக்கிடையே படங்களில் நடிப்பதில் பெரும்பாலும் போட்டி இருக்கும். ஆனால் பொறாமை இருக்காது. இதில் 1990-ம் ஆண்டு கால கட்டங்களில் ஜொலித்து வந்த பிரபலங்கள் இன்னும் முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.

தென்னிந்திய திரை உலகில் 90 கால கட்ட பிரபலங்கள் பலர் ஆண்டுகள் பல கடந்தும் வருடத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி நினைவலைகளை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, மோகன் ராஜா, நடிகர்கள் ஜெகபதி பாபு, பிரபுதேவா, மேகா ஸ்ரீகாந்த், நடிகைகள் சிம்ரன், மீனா, சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமாசென், மகேஸ்வரி, சிவரஞ்சனி, ஆகியோர் கோவாவில் ஒன்றாக சந்தித்தனர்.

அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடிய மகிழ்ச்சியில் நினைவுகள், ஆரவாரங்கள் என புன்னகையோடு கடந்த கால நிகழ்ச்சிகளை விருந்தோடு கடற்கரையில் ஒரு மாயாஜால கொண்டாட்டத்தை நடத்தினர்.

நிகழ்ச்சியின் போது மீனா, சங்கீதா, மகேஷ்வரி ஆகியோர் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் நடிகைகள் அனைவரும் சேர்ந்து எடுத்த ரீல்ஸ் வீடியோக்கள் என 'கோவா டூர்' பிரபலங்களின் மறக்க முடியாத கொண்டாட்டமாக அமைந்தது.

கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

Leave a comment

Comment