பொரளை பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கனரக வாகன சாரதியை எதிர்வரும் ஒகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, வாகன உரிமையாளரை 500,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.
பொரளை பொலிஸார் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று காலை பொரளை, மயான சந்தியில் கனரக வாகனம் ஒன்று பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7பேர் காயமடைந்ததுடன் ஒருவர் உயிரிழந்தார்.
இதேவேளை, விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் லொறியின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பதும் நேற்றைய சோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


