நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. அண்மையில் படத்தின் பாடலான கூலி தி பவர்ஹவுஸ் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு இருக்கிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடக்க இருக்கிறது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. நேற்று கோவை தனியார் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக லோகேஷ் கலந்துக் கொண்டார். மேலும் கே.ஜி சினிமாஸ் என்ற திரையரங்கு திறப்பு விழாவிலும் கலந்துக் கொண்டார். அப்பொழுது அங்கு மோனிகா பாடலை திரையில் கண்டு ரசித்தார்.
அப்பொழுது வெளிவரும் போது அங்கு இருந்த சிறுமி ஒருவர் லோகி மாமா லவ் யூ.. என சொல்ல அதற்கு லோகேஷும் லவ் யு சோ மச் என கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


