TamilsGuide

பாங்காக் சந்தையில் 5 பேரை சுட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட மர்ம நபர்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரபலமான ஓர் டோர் கோர் (Or Tor Kor) சந்தையில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, அடையாளம் தெரியாத ஒருவர் சந்தையில் நான்கு பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 5 பேரைச் சுட்டுக் கொன்றார். பின்னர் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சந்தையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் மக்கள் தப்பியோடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும், துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் வாகன நிறுத்துமிடத்தின் வழியாக ஓடும் காட்சியும் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவத்தின் நோக்கம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இது தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான தற்போதைய எல்லை மோதல்களுடன் இதற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment