TamilsGuide

இன்னும் 12 நாள்தான் - உக்ரைன் போரை நிறுத்த ரஷியாவுக்கு விதித்த காலக்கெடுவை குறைத்து டிரம்ப் கெடுபிடி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைனில் போரை நிறுத்த ரஷிய அதிபர் புதினுக்கு தான் அளித்த 50 நாள் காலக்கெடுவை 10 முதல் 12 நாட்களாகக் குறைத்துள்ளார்.

ஆகஸ்ட் 7-9க்குள் அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். இல்லையெனில் ரஷியா மீது வர்த்தக கட்டுப்பாடுகளும் 100 சதவீதம் வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"புதின் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும், பலர் இறக்கிறார்கள். இனி காத்திருக்க எந்த காரணமும் இல்லை, எந்த முன்னேற்றமும் இல்லை" என்று டிரம்ப் கூறியுள்ளார்.

காலக்கெடு குறைக்கப்பட்ட போதிலும், உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஒரே இரவில் 300க்கும் மேற்பட்ட டிரோன்கள், 4 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷியா ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment