சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்த 36 வயதுடைய ஆணும் 56 வயதுடைய பெண் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான இந்திய பிரஜைகள் இருவரும் மலேசியாவில் இருந்து இன்று அதிகாலை 12.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பின்னர் சந்தேக நபர்களான இந்திய பிரஜைகள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது இருவரும் கொண்டு வந்த 2 பயணப்பொதிகளும் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பைகளில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கிராம் குஷ் போதைப்பொருள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இதன்போது சந்தேக நபர்களான இந்திய பிரஜைகள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர்.


