TamilsGuide

ஹரி ஹர வீர மல்லு – பாக்ஸ்ஆபிஸ் ரிப்போர்ட்- நாளுக்கு நாள் அதிகரிக்கும் வசூல்

பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு பவன் கல்யாணின் படம் திரைக்கு வந்ததால் ரசிகர் கூட்டம் கூட்டமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர். திரைப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் சரியில்லாமல் இருக்கிறது என்று வந்த பார்வையாளர்களின் கருத்தை கேட்டு புதிய வி.எஃப்..எக்ஸ் காட்சிகளுடன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

திரைப்படம் இதுவரை 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் அதிக மக்கள் வந்தால் படத்தின் வசூல் 95 கோடி ரூபாயாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரும் 31 ஆம் தேதி விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்படம் வெளியாக இருப்பதால் ஹரிஹர வீரமல்லு திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படலாம்.
 

Leave a comment

Comment