TamilsGuide

ஆளே மாறிய நடிகை கயாடு லோஹரா 

டிராகன் படத்தில் அறிமுகமாகி இளசுகள் எல்லோரையும் கவர்ந்தவர் கயாடு லோஹர். அவர் ஒரே படத்தில் தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்திற்கே சென்று விட்டார். தற்போது அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

அவர் கவர்ச்சியாக வெளியிடும் புகைப்படங்களும் வைரல் ஆகின்றன. தற்போது அவர் சிம்புவுடன் STR49 படத்தில் நடித்த வருகிறார்.

தற்போது கயாடு லோஹர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் தாவணி அணிந்து ஹோம்லி லுக்கில் இருக்கிறார். மேலும் பெரிய கண்ணாடி அணிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.

பாட்டியின் கண்ணாடியை வாங்கி தான் மாட்டிக் கொண்டதாக குறிப்பிட்டு அந்த போட்டோவை அவர் வெளியிட்டு இருக்கிறார். எப்படி இருக்கிறார் என நீங்களே பாருங்க. 

Leave a comment

Comment