தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் மிருணாள் தாக்கூர். சீதாராமம், பேமிலி ஸ்டார் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
இந்தி திரை உலகிலும் தடம்பதித்து புதிய படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வரும் மிருணாள் தாக்கூர், தற்போது டக்கோயிட் எ லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் ஆத்வி சேசுடன் இணைந்து நடிக்கிறார்.
தன்னை காட்டிக் கொடுத்த தனது முன்னாள் காதலியை பழிவாங்க துணிந்த ஒரு கோபக்கார குற்றவாளியின் கதைதான் இந்த படம்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி படம் திரைக்கு வருகிறது.
சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வந்தது.
அப்போது எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியில் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஆத்விசேஷ், மிருணாள்தாக்கூர் ஆகியோர் காயம் அடைந்தனர். இருவருக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.


