TamilsGuide

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

வவுனியாவில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பரசங்குளம் பகுதியில் நிலைதடுமாறி மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் கிளிநொச்சி, பாரதிபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய ஜெயசீலன் திவாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா, புளியங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 

Leave a comment

Comment