TamilsGuide

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு மாதிரி ஒரு Cop Story பண்ணனும்னு ஆசை - லோகேஷ் கனகராஜ்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.

அண்மையில் படத்தின் பாடலான கூலி தி பவர்ஹவுஸ் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு இருக்கிறது. இதுவரை வெளியான சிக்கிடு, மோனிகா மற்றும் பவர் ஹவுஸ் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற இருக்கிறது.

படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது "எனக்கு ஒரு போலிஸ் திரைப்படம் எடுக்க வேண்டும் என்பது ஆசை,சாதாரண போலிஸ் திரைப்படமாக அல்லாமல் ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமான காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, சாமி போன்ற திரைப்படங்கள் போல் அது இருக்க வேண்டும். சமீபத்தில் ஒரு உண்மை சம்பவத்தை படித்தேன் அதை படமாக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது." என கூறியுள்ளார்.
 

Leave a comment

Comment