ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்றைய தினம் கிளிநொச்சி தெற்கு வளைய கல்வி பணிமனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
கிளிநொச்சி வளைய கல்வி பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வளையங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதக்கவும், இதில் விசேடமாக விஞ்ஞானம், தகவல் தொழிநுட்பம் போன்ற பாடங்களுக்கு அதிகமாக பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது மட்டுமின்றி சில பாடசாலைகள் நடத்த முடியாத அளவிலே ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது எனவும் இதற்கு ஒர் தீர்வும் வழங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது எனவும் கிளிநொச்சி வளையத்தில் மாத்திரம் 75 பேர் இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இடமாற்றம் பெற்ற ஆசியர்களுக்கு பதிலாக 35 புதிய ஆசிரியர்களே திரும்பி வந்துள்ளனர் எனவும் இதேபோன்று முல்லைதீவு, துணுகாய் வளையம் போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றது எனவும் அது மட்டுமின்றி கல்வியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வளங்களும் பற்றாக்குறையாக காணப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வடமாகாண ஆளுனறுக்கே இது தொடர்பான முழுமையான அதிகாரங்கள் காணப்படுகிறது எனவே இதற்கான உரிய தீர்வினை அவர்களே எடுக்க வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கே கிளிநொச்சி பகுதிக்கு தாம் விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.


