TamilsGuide

தீவிர உடற்பயிற்சியில் காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகு அளவான படங்களிலேயே நடித்து வருகிறார். தற்போது 'இந்தியன்-3' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'ராமாயணா' படத்தில் நடித்து வருகிறார்.

ஆனாலும் பெரியளவில் படவாய்ப்புகள் இல்லாததால் அவர் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் முன்புபோல சினிமாவில் கோலோச்ச அவர் தயாராகி விட்டார். இதற்காக ஜிம்மில் கடும் உடற்பயிற்சிகளையும், உணவு கட்டுப்பாடுகளையும் மீண்டும் கடைபிடிக்க தொடங்கியுள்ளாராம். 'சினிமாவில் மீண்டும் கலக்குவேன். சினிமாவில் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பேன்' என்று உறுதிபட சொல்கிறார்.

காஜல் அகர்வாலின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
 

Leave a comment

Comment