தயாரிப்பாளர்களில் இருந்து பார்வையாளர்கள் வரை சினிமா மீதான காதல் மட்டுமே அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. இவர்கள் அனைவரின் ஒரே நோக்கம் நல்ல சினிமாவை கொண்டாடுவது மட்டுமே! இந்த நோக்கமே பல நல்ல தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இவை பெருமை மிகு பல படங்களை காலம் கடந்தும் தமிழ் சினிமாவில் உருவாக்கி உள்ளது.
இத்தகைய ஆர்வம் மிக்க தயாரிப்பாளர்களில் பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸூம் ஒருவர். அவர் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், தனித்துவமான, தரமான கதைகள் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.
காதல் - த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'அந்த 7 நாட்கள்' திரைப்படத்தில் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எம். சுந்தர் இயக்கியுள்ளார். சச்சின் சுந்தர் இசையமைத்த இப்படத்தின் முதல் தனிப்பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதுடன் படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
படம் குறித்து தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் பகிர்ந்து கொண்டதாவது, "நான் படம் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தபோது ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத நல்ல கதைகள் மற்றும் நல்ல சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சொல்லப்படாத பல ஜானர்களும் கதைகளும் இருக்கிறது. இதெல்லாம் இன்றைய இளம் தலைமுறையினர் எடுத்து செய்ய வேண்டும். அதேபோன்ற திறமையாளர்களுக்கு பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் வாய்ப்பளிக்க தயாராக உள்ளது. தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான கதைகளை திரும்ப திரும்ப சொல்வதை விட புதுவிதமான கதைகளை சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது" என்றார்.
மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, "தனித்துவமான கதைகள் தேடிக் கொண்டிருந்தபோதுதான் பல திருப்புமுனைகளைக் கொண்ட எம். சுந்தரின் கதை கேட்டேன். இதற்கு மேல் கதை பற்றி நான் அதிகம் சொன்னால் அது திரையனுபவத்தை குறைத்துவிடும். சுந்தர் கதை சொல்லி முடித்த உடனே இந்தப் படத்தை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். நடிகர்கள் தேர்வில் இருந்து தொழில்நுட்பக்குழுவினர் வரை அனைத்தும் சரியாக அமைந்தது. அஜித்தேஜ், ஸ்ரீஸ்வாதி மற்றும் மற்ற நடிகர்களும் திறமையாக நடித்து படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளனர்".
சென்னை மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களை சுற்றிலும் 45 நாட்களில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள்: பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன், பாரதிராஜா, அற்புதன் விஜயன், பேபி வைணுவ ஸ்ரீ, பரோட்டா முருகேசன், சாந்தகுமார், கார்த்தி, பிரதீப், ஜனா, ராம்குமார், தனசேகரன், மூர்த்தி, அப்பல்லோ ஹரி, விஜயராஜ், இளங்கோவன், ஜெய்மன், யூசுப், ஆர்.ரூபகரன், சோபியா, ரவி மற்றும் பங்கஜ் எஸ்.பாலாஜி.
தொழில்நுட்பக் குழு விவரம்:
பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தலைவர்: செல்வகுமார் .டி,


