TamilsGuide

இந்த ஆண்டில் 36,000 புற்றுநோயாளர்கள் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் அனுமதி

இந்த வருடத்தின் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்  மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் 36,000 புற்றுநோயாளர்கள் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹங்சக விஜேமுனி நேற்றைய தினம்  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் தற்போது 3,300 வாய் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரசன்ன ஜயசேகர தெரிவித்துள்ளார்.

புகைபிடித்தல், வெற்றிலை மெல்லுதல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களால் வாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வாய் புற்றுநோய் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், இது கவலைக்கிடமான விடயமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment