TamilsGuide

ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிய போனிகபூர்

தமிழ் தாண்டி பாலிவுட் சினிமாவிலும் கனவுக்கன்னியாக மிளிர்ந்த ஸ்ரீதேவி, 2018-ம் ஆண்டில் மரணம் அடைந்தார். அவரது மகள்கள் ஜான்விகபூர், குஷி கபூர் ஆகியோரும் சினிமாவில் கலக்குகிறார்கள். ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூர் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருகிறார். தமிழில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' ஆகிய படங்களை தயாரித்துள்ளார். வழுக்கை தலையுடன், குண்டாக காணப்பட்ட போனிகபூர் தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலமாக 26 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார். முடிமாற்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டு இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம், அவரது மனைவி ஸ்ரீதேவி தானாம்.

போனி கபூரின் முந்தைய மற்றும் தற்போதைய தோற்றம்.

அவர் கூறும்போது, ''எடையைக் குறைத்து அழகாக மாறுங்கள். முடிமாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளுங்கள் என்று அடிக்கடி என் மனைவி சொல்லிக்கொண்டு இருப்பார். அதெல்லாம் எதற்கு? என்று நினைத்துக்கொள்வேன்.

இப்போது என் மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று தோன்றியது. அதனால் என் மனைவிக்கு பிடித்த மாதிரி மாறியுள்ளேன். இதை பார்க்க அவர் இல்லை எனும்போது வருத்தமாக இருக்கிறது'' என்றார்.
 

Leave a comment

Comment