கனடாவில் தீபச்செல்வனின் “சயனைட்” நூல் அறிமுகமும் வெளியீடும்...
கனடாவில் எமது உறவுகளின் பெரு வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை சயனைட் அறிமுக நிகழ்வு.
உலகமெங்கும் பயணிக்கும் சயனைட் வளவனின் கதை கேட்க...
ஈழத் தளபதியின் கதை கேட்க...
வருக!
July 27, 2025
Sunday @ 3 PM
CTCC Business Center
__________________________________
எழுத்தாளர் தீபச்செல்வன் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் சொல்வதென்ன..!
ஈழ எழுத்தாளர்களில் ஒருவரான எழுத்தாளர் தீபச்செல்வன் மீது அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் என்ன சொல்ல விளைகின்றன என்ற கேள்வி ஈழ இலக்கியவாதிகளிடையே தோன்றி நிற்கும் கேள்வியாக அமைய வேண்டும்.
ஆயினும் அப்படி எழ வேண்டிய கேள்வி அவர்களிடையே எழுந்துள்ளதாக தெரியவில்லை என சமூகவியல் கற்றல்களில் ஈடுபட்டு வருவோர் குறிப்புரைக்கின்றனர்.
எழுத்தாளர் தீபச்செல்வன் கவிதைகளையும் நாவலையும் நூல்களாக வெளியிட்டுள்ளார்.அத்தோடு இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் தனது ஆக்கங்களை எழுதி வருகின்றார்.
இந்தியாவில் பிரபலமான பத்திரிகைகளிலும் தீபச்செல்வன் ஈழம் பற்றிய தன் கட்டுரைகளை எழுதிவரும் ஒருவராகவும் துறைசார் நிபுணத்துவத்தினை பெற்றுள்ள தமிழறிஞர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் கிளிநொச்சியில் வாழ்ந்துவரும் அவர் பாடசாலையின் தமிழ்ப்பாட ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.
இத்தனைக்கும் மேலாக அவர் நடுகல், பயங்கரவாதி என்ற இரு நாவல்களை எழுதியதன் மூலம் உலகம் முழுதும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளார்.
சிங்கள இலக்கியவாதிகளின் பேராதரவையும் அவர்களது நன்மதிப்பையும் பெற்றுள்ள ஈழத்தமிழ் எழுத்தாளராகவும் எழுத்தாளர் தீபச்செல்வன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை குடிமகனாக இருந்து கொண்டு ஒரு ஆசிரியராக இருப்பதால் இலங்கையின் அரச இயந்திரத்தின் ஒரு கூறாக அதாவது ஒரு உறுப்பினராக இருந்து வரும் தீபச்செல்வன் நான் சிறிலங்கன் இல்லை என தலைப்பிட்டு ஒரு கவிதை நூலை வெளியிடுகின்றார்.
அப்போது அவரை அழைத்து நீங்கள் சிறிலங்கன் இல்லை என்றால் நீங்கள் யார்? என்ற ஒரு கேள்வியை கேட்டு தீபச்செல்வன் மீது விசாரணைகளை வலுவாக ஆரம்பித்திருக்கலாம்.ஆயினும் அப்படி நடந்திருக்கவில்லை என்பது இங்கே நோக்கத்தக்கது.


