TamilsGuide

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்காக கனடா வாழ் தென்மராட்சி மக்களிடமிருந்து நிதி சேகரிப்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசரப்பிரிவை இயங்க வைக்க தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்யவேண்டி தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் கனடா எனும் எமது அமைப்பின் நிர்வாகசபை உறுப்பினர்களால் கனடா வாழ் தென்மராட்சி மக்களிடமிருந்து நிதி சேர்க்கப்பட்டது. நாம் எதிர்பார்த்ததற்கு மேலாக நமது மக்கள் தாராள சிந்தையுடன் புலத்தில் இருக்கும் தமது உறவுகளுக்கு சிறந்த வைத்திய சேவை கிடைக்க வேண்டுமென விரும்பி நன்கொடை வழங்கினார்கள். அதில் அவசர சிகிச்சைக்கான உபகரண கொள்வனவுக்காக தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் கனடாவின் பங்களிப்பு தொகை கொடுத்த பின்னர் மீதமிருந்த ரூபா 6395483.89 தொகையை கடந்த திங்கள் கிழமை ஆடி 21 2025 ம் நாளில் கனடாவைச் சேர்ந்த தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் கனடாவின் தலைவர் திரு. ஞானகுணசீலன் (செல்வன்), அமைப்பின் நிர்வாக சபை உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் திருமதி. வாசுகி, திருமதி. சுபோதினி மற்றும் தென்மராட்சி மக்கள் நலன் விரும்பி திரு. ராகவன் அவர்களும் இணைந்து தாயகத்தில் இருக்கும் தென்மராட்சி அபிவிருத்தி கழகப் பொறுப்பாளர்களிடம் கையளித்துள்ளனர் என்பதை தென்மராட்சி மக்களுக்கு அறியத் தருகிறோம்.

இங்கனம்,
தென்மராட்சி அபிவிருத்தி நிறுவனம் கனடா நிர்வாக சபை


 

Leave a comment

Comment