தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்தவேண்டும் எனக் கூறி அரசாங்கத்தை வலியுறுத்திய போதிலும், அதனை அமைச்சர் அணில் ஜெயசிங்க நாடாளுமன்றத்தில் நிராகரித்துள்ளார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் குற்றம்சுமத்தியுள்ளார்.
ஜக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதனத்தை உயர்த்த வேண்டும் என்பது அரசாங்கத்தின் வாக்குறுதியாக இருந்த போதிலும், அதனை நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவர்கள் புறக்கணித்து வருகின்றனர். குறிப்பாக, அந்த சம்பள உயர்வுக்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிராகரித்தது வருத்தத்திற்குரியது” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


