TamilsGuide

சுகாதார அதிகாரி மீதான துப்பாக்கி சூடு முயற்சி தோல்வி

தெஹிவளையில் உள்ள எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு அருகில் இன்று (24) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுகாதார நிர்வாக அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், துப்பாக்கி செயலிழந்ததால் சந்தேக நபர் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

மேலும், துப்பாக்கிச் சூடு முயற்சிக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சந்தேக நபரை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment