TamilsGuide

ரெட்ரோ படத்தின் Unseen லுக் டெஸ்ட் புகைப்படம்- சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த கார்த்திக் சுப்பராஜ்

நடிகர் சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்தார். திரைப்படம் கடந்த மே 1 வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியது. ரெட்ரோ படம் உலக அளவில் ரூ.235 கோடி வசூலில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நடிகர் சூர்யா இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில், 'ரெட்ரோ' படத்தின் Unseen லுக் டெஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுவாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment