நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள சிவகார்த்திகேயன் இன்று காலை ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வருகை தந்தார்.
சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக அவர் அமர்ந்திருந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.
கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரசிகர்கள் சிவகார்த்திகேயனுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.


