TamilsGuide

தர்ஷன் - காளி வெங்கட் நடித்த Housemates படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

கனா திரைப்படத்தை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார் தர்ஷன். ஆனால் இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அடுத்ததாக தர்ஷன், இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள ஹவுஸ் மேட்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் ப்ளேஸ்மித் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. கதாநாயகன் வீடு வாங்குகிறார் அங்கு பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. இது ஒரு காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அக்கலு பக்கலு பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் ஷான் ரோல்டன் பாடியுள்ளார்.
 

Leave a comment

Comment