TamilsGuide

கருப்பு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு - டீசர் அப்டேட்

ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

நேற்று இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில், சூர்யா கருப்பு உடையில் மாஸ் லுக்கில் இருந்தார். மேலும் இப்படத்தின் டீசர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என அப்படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தெரிவித்தார்.

இதனையடுத்து கருப்பு படத்தின் செகண்ட் லுக்கை நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஆர்ஜே பாலாஜி வெளியிட்டார். அதில் சிவப்பு நிற சட்டையுடன் செம லுக்கில் சூர்யா உள்ளார். இந்த புகைப்படங்கள் சூர்யா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 
 

Leave a comment

Comment