திலீஷ் போதன் மற்றும் ரோஷன் மாத்யூ முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ஷாஹி கபிர் இயக்கிய திரைப்படம் ரோந்த். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் ஓர் இரவில் இரண்டு காவல் அதிகாரிகள் ரோந்து பணிகளில் ஈடுப்படும் போது சந்திக்கும் பிரச்சனையை மையப்படுத்தி இயக்கப்பட்ட படமாகும்.
இப்படத்தை ஜங்கிள் பிக்சர்ஸ் மற்றும் ஃபெஸ்டிவல் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை அனில் ஜான்சன் மேற்கொண்டார். இந்நிலையில் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் ,தெலுங்கு, மலையாளம்,இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிருப்பது குறிப்பிடத்தக்கது.


