TamilsGuide

எரிபொருள் வரி நீக்கம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு

முந்தைய அரசாங்கத்தின் கீழ் திறைசேரியிடமிருந்த வாங்கப்பட்ட இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) கடன் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டவுடன், எரிபொருள் மீதான ரூ.50 வரி நீக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.

884 பில்லியன் ரூபா கடனில் பாதி ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அதில் இந்த வரி குறிப்பாக CPC இன் பொறுப்புகளை நிவர்த்தி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது என்றும், அதற்கு அப்பால் நிலையான அரசாங்க வரிகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்றும் தெளிவுபடுத்தினார்.
 

Leave a comment

Comment