கனடாவின் கல்கரியில் திங்கட்கிழமை காலை ஏற்பட்ட பல வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் மூவர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கல்கரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில், பாதை மறுபுறத்தில் இருந்த ஒரு பாதசாரி, வாகனமொன்றால் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தப் பகுதியில் அதிகாலை வேளையில் வாகனங்கள் அதிக வேகமாக செலுத்தப்படுவதாகவும், வாகன ஓட்டப் பந்தயங்கள் நடத்தப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


