TamilsGuide

Saiyaara படம் மூன்று நாட்களில் சென்சேஷனல் வசூல்.. 

பாலிவுட் திரையுலகில் இருந்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் Saiyaara. இப்படத்தை பிரபல முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மோஹித் சூரி இயக்கியிருந்தார்.

இப்படத்தின் மூலம் ஆஹான் பாண்டே, அனீத் படா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இளம் நடிகை அனன்யா பாண்டேவின் உறவினர்தான் இந்த ஆஹான் பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் Saiyaara படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 103 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சென்சேஷனல் ஆகியுள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a comment

Comment